ரவுப் தங்கச் சுரங்கம் உடல் நலனுக்கு ஆபத்து- அறிவியியல்பூர்வமான ஆதாரம் இல்லை: சேவியர் கூறுகிறார்

0
25

பகாங், ரவுப், புக்கிட் கோமானில் தங்கச் சுரங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சைனைட் இரசாயனம் அங்கு வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தில், தாம் பெற்றுள்ள தகவல்படி தங்கச் சுரங்கத்தில் சைனைட் பயன்படுத்துவதால், அதைச் சுற்றியுள்ள பகுதியில் காற்றுக்கும் (அங்கு குடியிருப்பவர்களின்) உட்ல்நலத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று சேவியர் கூறினார்.

சமீபத்திய ஆய்வு ஒன்று சைனைட் நாற்றம் எதையும் வெளிப்படுத்துவதில்லை என்று கூறுவதாக சேவியர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here