ஆலயங்களில் நமது அரசியல்! -பகுதி: இரண்டு

0
141

களம் காணுபவர்- முனைவர், பெரு. அ. தமிழ்மணி

பகுதி- இரண்டு

பலதரப்பட்ட காரணங்களுக்காக, கரணமடித்து இப்படிச் சிக்குண்டு சிதறுண்டுப்போனதும், போவதும், போனவர்களுமே காரணமாகும்! இதற்கிடையில் இந்த தகராறுகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம்,-இந்த அரசு மீதும், அல்லது முன்பிருந்த அரசுமீது குறைகளையும் குற்றங்களையும் அள்ளி வீசிவதும் பின்னர் அதையே  மலாய்க்காரர், சீனர்களுக்கான துவேஷமாக மடை மாற்றுவதும் அதைவொரு பிழைப்பாகவே வைத்துக்கொள்ளுவதை வாடிக்கையாகியும் வேடிக்கையாகியும் விட்டது. அதோடு மட்டுமல்ல, தெருவிலே, போகிற வருகிறவன் மீதெல்லாம் பழியைச் சுமத்தி, உணர்ச்சியைத் தூண்டி விடுவதுமட்டுமல்ல, இதுபோன்ற பிரச்சனைகள் தலையெடுக்கும் போதொல்லாம், திடீர் இயக்கங்களும், திடீர் தலைவர்களும் தலைத்தூக்கிவிடுவதுமுண்டு!

அப்படி உருவெடுத்ததுதான் ஹிண்ராப்பும், அதனுடைய திடீர் தலைவர்களுமாகும்! அதற்கு முக்கிய களமாக அப்போது(2007) முன்னெடுக்கப்பட்டது,கம்போங் ஜாவா ஆலயமும், குண்டர் தனத்தில் ஈடுப்பட்டிருந்த நமது குண்டர்கள் மீது போலீசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளுமாகும்!

இன்றைக்குள்ள நமது ஆட்சியாளர்கள் இதை  எப்படி அன்று முன்னெடுத்தார்கள்,அதன் வழி என்ன பயன் பெற்றார்கள் என்பதை இன்னொரு நிலையிலிருந்து நாம், விவாதிக்கப்பட வேண்டிய விசயமாகும்; இருப்பினும் அதேவேளை ஹிண்ட்ராவை முன்னெடுத்த பலருள் அதில் சிலர், இன்றைக்கு எந்த மாதரியான அரசியல் நடவடிக்கையில் இறங்குகிறார்கள், இயங்குகிறார்கள் அதனுடைய பின் விளைவுகள் எவ்வாறு கையாளப் படுகின்றன என்பது குறித்து தெளிவாக யோசிக்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்க வேண்டியுள்ளது.

(தொடர்கிறது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here