கூட்டரசு நீதிமன்றத்தில் பி. நளினி முதல் இந்திய பெண் நீதிபதி!

0
113

முதன்முறையாக இந்திய பெண் நீதிபதி டத்தோ பி. நளினி. மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டரசு நீதிமன்றத்துக்கும் முறையீட்டு நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ள ஒன்பது பேரில் நளினியும் ஒருவர்.

1959 ஆகஸ்ட் 23ம் தேதி பினாங்கில் பிறந்த நளினி லண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டமும், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழகத்திலிருந்து சட்டத்துறையில் டிப்ளோமாவும் பெற்றார்.

1984 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக தொழில் துவங்கிய இவர் 2014 ஆண்டு செப்டம்பர் 12, அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பெற்றார்.

“தி லாஸ் ஆஃப் டிஸ்மிசல்” என்ற தலைப்பில் ஒரு புத்தகமும் இவர் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.