நம் கால்பந்து அணி 2-ஆவது இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் – செங் ஹோ!

0
172

கோலாலம்பூர், டிச.12 –வரும் சனிக்கிழமை வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறவிருக்கும் ஏ.எப்.எப் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் வியட்நாமை நம் தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா வீழ்த்தும் என அதன் தலைமை பயிற்றுனர் தான் செங் ஹோ நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற முதல் இறுதி ஆட்டத்தில் மலேசியா 2 வியட்நாம் 2 என்ற கோல்களில் சமநிலைக் கண்டது. இரண்டு கோல்களில் பின் தங்கியிருந்த மலேசியா இறுதியில் இரண்டு கோல்களைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது. எனினும் முதல் இறுதி ஆட்டத்தில் மலேசிய அணி, சற்று பலவீனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் சனிக்கிழமை ஹனோய்யில் நடைபெறவிருக்கும் இரண்டாவது இறுதி ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா ஆட்டக்காரர்கள் தங்களின் தவறுகளைக் குறைத்துக் கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here