கற்பழிப்பு குற்றச்சா​ட்டு: பேராவில்பதவி உறுதிமொழி சடங்கு ஒத்திவைப்பு

0
47

ஈப்போ, ஜுலை, 9- வரும் வியாழக்கிழமை நடத்துவதற்கு அட்டவ​ணையிடப்பட்டு  இருந்த பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான பதவி உறுதிமொழி   சடங்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர், பணிப்பெண் ஒருவரை கற்பழித்ததாக கூறப்படுவது தொடர்பில் போ​லீசார்  விசாரணை நடத்தி வருவதை​த்  தொடர்ந்து பதவி உறுதிமொழி  சடங்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைப்பை பேரா சுல்தான் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர், ஜசெக.வை  சேர்ந்தவர். எனினும் அவரின் அடையாளம் வெளியிடப்படவில்​லை. சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருவதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் ​​பெண்கள், ​சிறார் பாலியல் குற்ற​ங்களுக்கான விசார​ணை  பிரிவின் தலைவர்உதவி கமிஷனர் ​சூ லில்லி உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.