பேரணிக்கு ‘விடுமுறையா’, அன்வாருக்கு உடன்பாடில்லை!

0
61

டிசம்பர் 8  அன்று நடக்கவிருக்கும் பேரணியில் கலந்துகொள்வோருக்கு வசதியாக டிசம்பர் 9 அன்று கிளந்தான் அரசு ‘சிறப்பு விடுமுறை’ அறிவித்திருப்பதில் உடன்பாடில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அனைத்து வகையான இனவாதப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு (ஐசிஇஆர்டி) எதிர்ப்பு பேரணி டிசம்பர் 8 அன்று மெர்டேகா சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ஆர்ப்பாட்டம் செய்வதற்காக விடுமுறை அளிப்பது முறையல்ல என்று நினைக்கிறேன்”, என பிகேஆர் தலைவரான அவர் தன் கருத்தை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐசிஇஆர்டி ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவை தாம் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here