சமத்துவத்தையும் – சமாதானத்தையும் இன்றைய உலகம் பேண வேண்டும்! டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்து

0
54

புத்த மதத்தை தழுகின்றவர்கள் கெளதம புத்தரின் பிறந்த நாளக விகாகத் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த மலேசியத் திருநாட்டில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் அனைவரும் தனது விசாக தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவரது உண்மையான பெயர் சித்தார்த்த கெளதமர் என்றும், ஞானம் பெற்ற பின்னர் இவர், புத்தர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். புத்தரின் கோட்பாடுகள் மிகவும் எளிமையான கோட்பாடாகும். பிறப்பு, இறப்பு, பசி, இன்பம், துன்பம், உயிர்ப்பலி ஆகியவற்றின் வலிகளை உணர்ந்து, அதன்வழி மனிதகுலம் எவ்வாறு எல்லாம் துன்புகின்றார்கள் என்பதனை தமது கருத்தால் உணர்ந்த புத்தப் பெருமான் தனது அரச வாழ்வினைத் துறந்து, மனித குலத்தின் இன்னல்களை போக்கும் ஞானியாக மாறினார் என்பது புத்த மதத்தின் வரலாறு கூறுகிறது.

புத்த சமயத்திற்கென்று எந்தவோர் பக்தி இலக்கியங்கள் இல்லாது இருந்தாலும்கூட, புத்த சமயத்தில் குரு – சீடர் என்ற வாய்மொழி வழியாகவே இம்மதம் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. குரு – சீடர் என்ற நிலையில் அவர்களின் பண்புகளும், பணிவான செயல்களாலுமே புத்த மதம் போற்றப்பட்டு வருகின்றது. புத்த மதத்தை பின்பற்றுகின்றவர்கள் உலகம் முழுவமே பரவி வாழ்ந்து வருகின்றர். அந்த வகையில் சமத்துவத்தையும் – சமாதானத்தையும் இன்றைய உலகில் பேணும் வகையில், விசாக தினத்தைக் கொண்டாடும் அனைத்து புத்த மத சமயத்தார், இந்நாளை ஒற்றுமையுடன், சிறந்த பண்புகளைப் பாராட்டி கொண்டாட வேண்டுமென்று நாடாளுமன்ற மேலவை சபாநாயகருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மேலும் அப்பத்திரிகைச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here