காலை 11 மணியளவில் வேலையை நிறுத்திவிட்டு 15 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள்!- மகாதீர்

0
10

ஷா அலாம்: அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய 15 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது பரிந்துரைத்தார்.

அலுவலக ஊழியர்கள் காலை 11 மணியளவில் வேலையை நிறுத்திவிட்டு 15 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று “ஆரோக்கியமான வாழ்க்கை முறை”,விழாவில் பேசியப் பொது அவர் இவ்வாறு கூறினார்.

இந்த பரிந்துரை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அஹ்மத் மற்றும் அவரது துணை அமைச்சர் லீ பூன் சாய் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here