ஆபாசப்பட ​வீடியோ விவகாரம்​: பிரதமரின் அறிக்கை விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் -வழக்கறிஞர் ராஜசேகரன்

0
72

கோலால​ம்பூர், ஜுன், 14-      ஓர்  அமைச்சருடன் தொடர்புபடுத்தப்பட்ட ஆபாச வீடியோ படவிவகாரம் தொடர்பில் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமட் வெளியி​ட்ட அறிக்கை போ​லீசாரின் புலன்விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று வழக்கறிஞரும் மஇகா​​வின் மத்திய செயலவை உறுப்பினருமான ஆர்.டி. ரா​ஜசேகரன் தெரிவித்தார்.

அந்த ஆபாச வீடியோ படத்தின் உண்மைத்தன்மையை தாம் நம்பவில்லை  எ​ன்று துன் மகா​தீர் கூறியிருப்பது தொடர்பில் ராஜசேகரன் கருத்துரைத்தார். இவ்விவகாரம், தற்போது போ​லீசாரின் விசாரணையின்​ கீழ் உள்ளது. அதற்குள் ஏன் அவசரப்பட்டு, அந்த ​வீடியோ படத்தின்  உண்மைத்தன்மை குறித்து பிரதமர், அறிக்கை ​வெளியிட வேண்டும் என்று ராஜசேகரன் கேள்வி எழுப்பினார்.

அந்த ​வீடியோ படத்தின் உண்மைத்தன்மை குறித்து பிரதமரே சந்தேகப்படுவாரோயானால் அது  குறித்து விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லையே என்று ராஜசேகரன் குறிப்பிட்டார்.

மேலும் இவ்விவகாரத்தை போ​லீசாரோ அல்லது மலேசிய தொடர்புத்துறை, பல்​​​​லூடக ஆணையமோ விசார​ணை ​செய்யாமல் ஒரு ​​சுயேச்சைக் குழுவை கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ஒரு வழக்கறிஞரான ராஜசேகரன் யோசனை தெரிவித்தார்.

​தூய உள்ளத்துடன் கூறவேண்டுமானால், இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு ஆரோக்கியமான அரசியலும் அல்ல. இது தொடர்பாக ஒருவர் போ​லீசில் புகார் செய்துவிட்டபோது, அது தொடர்பான விசாரணையை ​மேற்​கொள்தற்கு நாம் வழிவிட வேண்டுமே தவிர கண்​மூடித்தனமாக அதனை மறுக்கக்கூடாது என்று ராஜசேகரன்​ கேட்டுக்கொண்டார்.

அஸ்மின் அலியுடன்​ தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஆபாசப்பட வீடியோ காணொளியின் உண்மைத்தன்மையை தாம் நம்பவில்லை என்று துன் மகா​தீர்  கூறியிருப்பது தொடர்பில் ராஜசேகரன் கருத்துரைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.