அடுத்தாண்டு முதல் எல்லா மாநிலங்களிலும் பொங்கலுக்கு விடுமுறையளிக்க வேண்டும்!

0
173

மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் கோரிக்கை!

மலேசியத் திராவிட பெருங்குடி மக்களின் நீண்ட நெடிய நாளாக விடுக்கப்பட்டு வந்துள்ள, பொங்கலுக்கான பொது விடுமுறை கோரிக்கையை மலேசிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளது, இந்த தொடர் போராட்டத்திற்கு தற்போதைய மலாக்கா மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள  புதிய  அரசு செவிச்சாய்த்து; வரும் பொங்கலிருந்து (15-1-2019) அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக  அறிவித்திருப்பதை வரவேற்று மகிழ்வதோடு; மாநில அரசுக்கும் முதல்வருக்கும் மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் பாராட்டையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்வதாக அதன் தேசியத்தலைவர், முனைவர்  பெரு. அ.தமிழ்மணி குறிப்பிட்டார்.

அவர்  மேலும் தமதுரையில் குறிப்பிடும் போது,

“இன்று திருவள்ளுவராண்டையொட்டி, பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம்! பொங்கலுக்கான நிகழ்வையும் துவக்கிவைக்கிறோம்  அதனால் பொங்கலுக்கான பொது விடுமுறையை நோக்கி ஒட்டுமொத்த திராவிடயினமும் இனி நகர வேண்டியதற்கான காலம் கனிந்துவிட்டது என்று குறிப்பிட்ட அவர்,1675 லிருந்து உழைப்பை மட்டுமே  முதலீடாகக் கொண்டு ,மலாயா போன்ற பல நாடுகளில் திராவிடயினம் குடியேற வேண்டிய நிலையேற்பட்டது. பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனிகள் வழியும், இன்னும், டச்சு,போர்த்துக்கீசியர்,பிரஞ்சு போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினான நாடுகளிலிருந்தும் நமது திராவிடயினம் பலவகையான கட்டாய நெருக்கடியால் குடிப் புகவேண்டியதாயிற்று.

அதற்கு முன்பு!10, 11,12 ஆம் நூற்றாண்டுகளிலிருந்தும் வணிக அடிப்படையிலும் போர்கால அடிப்படையிலும் திராவிட பெருங்குடி மக்களின் வருகை ,இங்கு அமையப்பெற்றிருந்தாலும், உழைப்பின் அடிப்படையில் அமைந்த வருகையே நம்மை இங்கு ஓரளவு நிலைபெற வைத்துள்ளது. அந்த அடிப்படையில் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைச் செய்வோம்! வீணில் உண்டுக் களிப்போரை நிந்தனைச் செய்வோம்! ‘என்ற கருத்தியலிலும், செயலிருவிலும் பொங்கலை முன்னெடுப்போம்! பொங்கலுக்கான நிறைய அறிவியல் பின்னணிகளும், பண்பாட்டுப்பின்னணிகளும், வரலாற்றுப் பின்னணிகளும், உழைப்பு, அறுவடை, வாழ்வியல் தத்துவங்களுமுண்டு, என்பதாலே; இதை மதவழி திருநாளாகவோ, கடவுள் வழிபெருநாளாகவோ திராவிடயினம் கொள்ள வேண்டிய அவசியம் ஏது வரலாற்று அடிப்படை  கிடையாது, இடையிலே ஏற்பட்ட ஆரிய வருகையாலும்  செருக்கினாலும், நமது பண்பாட்டுத் தலங்களில் சிதைவும், திராவிடமொழிகளில் கலப்பும்,சமய, கடவுள் வழிமுறைகளில் ஏகப்பட்ட தடுமாற்றமும் ஏற்பட்டுள்ளதேயொழிய, பொங்கலைப்பொறுத்தவரை  திராவிடப் பண்பாட்டுப் பெரு விழவாகவே எண்ணிடவும் அதைக் கொண்டாடிவும் வேண்டுமென்று குறிப்பிட்ட தமிழ்மணி, மேலும்; இங்கு இந்திய இன மக்களுக்கான ஒரு தோற்றம் ஒரு மாயையாக சித்தரிக்கப்பாட்டிருந்தாலும், அதன் வழி அவரவர்களுக்கென தனி தனி பண்பாட்டுத்தலங்களில் சில திருநாள்கள் வந்து போவதாகயிருந்தாலும் இங்குள்ள திராவிடயினக் கட்டைப்புக்குள் பொங்கலை முன்வைத்தே பொதுவிடுமுறைக்கான கோரிக்கையை முன் வைக்க வேண்டியுள்ளது.

அதுவும் சமயம் கலக்காத திருநாளாக அதை  முன்னெடுப்பதை வைத்தே, எல்லா சமயங்களைச் சார்ந்த மக்களெல்லாம் மத வேற்றுமையை மறந்து ஒற்றுமை விழாவாக பொங்கலை ஏற்க வைக்க முடியும். அதோடுமட்டுமல்ல, உழைப்புக்கான அடிப்படையும், அதற்கான அறுவடையும்  (வருமானம்) முக்கியமெனக் கொண்டால், இங்குள்ள பல்லின மக்களும், வீடுவரையும் நாடுவரையும் பொங்கலை முன்னெடுக்கத் தொடங்குவார்களேயானால் காலவோட்டத்தில் பொங்கல் தேசிய விழாவாகவும் முன்னெடுக்கப்படலாம்; நமது சமய ஈடுபாடுகளென்றால் அது தைப்பூசமாகவும்  தீபாவளியாகவும் இருப்பதாலே, அதற்கு, ஏற்கனவே பொதுவிடுமுறை வழங்கப்பட்டு வருகிறது, அதனால் பொங்கல் திராவிடயின மக்களின் ஒன்றுப்பட்டதிருநாளென்றாகும் போதும் அதற்கு பொதுவிடுமுறைக்கான முன்னெடுப்பை முன்மொழிதலின் போது, இங்குள்ள திராவிடயினக்கூறுகளான, தெலுங்கு, மலையாள, கன்னட மக்களெல்லாம் இணக்கம் காட்டாமல், அவரவர் சமய பண்பாட்டுத் தலங்களில் தங்களுக்கான பொதுவிடுமுறைக்கான காரணக்காரியங்களை முன் வைத்து பொங்கலுக்கான அவசியத்தையும் பொதுவிடுமுறைக்கான தீர்வுகளையும் எந்தவகையிலும் சீர்குலைத்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகயிருக்க வேண்டும், கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கையில் சிலர் ஈடுப்பட்டதால்  பொங்கலுக்கான விடுமுறை தேவை தகர்க்கப்பட்ட வரலாறுண்டு என்பதை கவனத்தில் கொண்டே பொங்கலுக்கு தேசியவிடுமுறையை பெறவேண்டியுள்ளது.

இன்று உலகில் 10 நாடுகளில் தமிழர்கள் கணிசமானயளவு வாழ்கிறார்கள். 75 நாடுகளில் அடையாளப்படுதப்பட்டுள்ளார்கள், 33 நாடுகளில் தமிழாகவே ஊடூருவியுள்ளது. 75 நாடுகளில் திராவிடமொழிக்கட்டமைப்புகள் கண்காணிக்கப் பட்டுள்ளன, 130 நாடுகளில் திராவிடயினக் கட்டமைப்புக்கான வாழ்வியல் காணப்பட்டுள்ளன. 250- 300 கோடிவரைக்குமான மக்கள் ஏன் திராவிடர்களாகயிருக்ககக் கூடாது என்ற ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன, ஆனால் நாமோ, இந்திய துணைக்கண்டம், பண்டையத் தமிழகம், அதன் பின் 1956 ல் சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரியாக பிரித்தெடுக்கப்பட்ட மொழிவாரியான மாநில எல்லைகளிலிருந்து ;தமிழ்த்தேசியம் பேசுவதும் திராவிட மீட்சிக்கான குரலெழுப்பதுமாகயிருப்பதாலே அகண்ட திராவிடத்தை மறந்திருக்கிறோம், மறைத்திருக்கிறோம், இந்த வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொண்டால், ஒட்டுமொத்த திராவிடயின மக்களின் உலகப் பெருநாளாக திருநாளாக பொங்கல் மட்டுமே நிலைபெறும்,அதில் மலேசிய மக்களும் இடம் பெறுவர் நிலைபெறுவரென்று முனைவர்பெரு. அ.தமிழ்மணி குறிபிட்டார்.

நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இவ்விழாவில், மலேசியத் திராவிடர் கழகத் தேசியத்தலைவர் ‘கழகச்சுடர்’ மானமிகு,எப். காந்தராசுடன் கழகத்தோழர்களுடன் கலந்து கொண்டதோடு திருவள்ளுவர் சிலைக்கு மாலையும் அணிவித்தனர். மற்றும் பேராக்  பெரியார் பாசறைத்தலைவர் வா. அமுதவாணன் பாசறைத்தோழர்களுடன் பங்கேற்றார். மற்றும் தன்மான இயக்க உதவித்தலைவர்களான, தாசி. முனியரசன், பா.கலைவாணன், பொருளாளர் சொ. சிரிதரன், கழக முன்னோடிகளான, மதிக உதவித்தலைவர் பாலன், சிலாங்கூர் மாநில மதிக தலைவர் த. பரமசிவம், சமூகப்போளி, சேபி.சாமுவேல்ராசு, தன்முனைப்பாளர் ரே கோ ராசு, பேராக் தலைவர் லட்சுமணன்,புரட்சிக்கவிஞர் தி.ப செழியன்,மலாக்கா முத்தமிழ்மன்றத் தலைவர் இளங்கே , படைப்பாளர் கவி, கவிமணி , நீலாய் காசீம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற விழாவைத் தன்மான இயக்கத் தலைமைச்செயலாளர் மானமிகு சி. மு.  விந்தைக்குமரன் தொகுத்து வழங்கினார். இனிய பொங்கலுடன் விழா நிறைவுற்றது.

14-1-2019- செய்தி- முகிலன்- செண்பகவள்ளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here