போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் ம இ கா பதுங்குமா? களம் காணுமா?

0
88

விரைவுச்செய்தி!

போர்ட்டிக்சன் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி வருவதால் ; அந்த தொகுதியில் ம இ காவா அல்லது அம்னோவா இதில் எந்த கட்சிக் களத்தில் குதிக்க வேண்டிவரும் எனும் மில்லியன் டாலர் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை; இந்த இரண்டுக் கட்சிகளின் தலைமைக்கும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துமென்று தெரிகிறது.

ம இ காவுக்கும் அம்னோவுக்குமான இந்த மெளன யுத்தத்தில் கரைசேர வேண்டிய பொறுப்பு இருகட்சிகளுக்கும் இருக்கிறதென்றாலும், அதில் ம இ காவின் நிலையென்னவாக அமையுமென்பதே மிக முக்கிய கேள்வியாகும்!

காரணம் 2008 தேர்தலிருந்து இந்த தொகுதி, கெஅடிலான் வசமாகிவிட்டது, மூன்று முறை வெற்றிக்கொண்ட, இத்தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளர்களில் இந்த முறை டேனியல் வசமாகியது; அதனாலே தற்போது: அக் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் போட்டியிட வேண்டி, அத்தொகுதியை அவருக்கு விட்டுக்கொடுத்திருப்பதாலே, இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

இத்தொகுதியில் அன்வார் களம் காணுவதாலே, தேர்தல்களம் சூடுபிடிக்கவே செய்யும் என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே ம இ கா மீண்டும் அத்தொகுதியை ,அம்னோவிடம் கேட்டுப்பெறவேண்டிய நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. அத்தொகுதியைப் பொறுத்தவரை ம இ காவுக்கான அடையாளம் 1974 லிருந்து இருந்து வருகிறது.

ம இ காவின் பாரம் பரியமிக்க தொகுதி எனும் அடையாளத்தை ம இ கா மீண்டும் இந்த இடைத்தேர்தல் மூலமாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமானால் அத்தொகுதியை வெற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை வெற்றிபெற முடியாது என்று காரணங்காட்டி ,ம இ கா ஒதுங்கிக்கொள்ளவும் முடியாது. ஒருசமயம் அம்னோ அத்தொகுதியை கேட்டும் பெறும் சூழ்நிலை உருவாகுமேயானால், அம்னோவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று என்று ம இ கா காரணமும் கூற முடியாது.

அப்படி அம்னோவுக்கு அத்தொகுதியை ம இ காவிட்டுக்கொடுக்குமேயானால்
புதிதாக கட்சிக்குத்தலைமையேற்றுள்ள டான்ஸ்ரீ விக்னேசுரன் தலைமைக்கு விடப்பட்ட ஒரு சவாலாகவும் அமையலாம்!

இதற்கிடையில் , பொதுத் தேர்தலுக்குப்பின்பு; பாரிசான் உறுப்புக்கட்சிகளுக்கிடையே சரியான புரிந்துணர்வற்ற நிலை தொடர்கிறது அதாவது;பொதுத்தேர்தல் தோல்விக்கு ;அம்னோ தலைமைத்துவம் மேற்கொண்ட சில தவறான அணுகுமுறைதான் காரணமென்ற குற்றச்சாட்டை, ம சீ ச- கெராக்கான்- ம இ கா போன்ற கட்சிகள் முன் வைக்கின்றன. இப்படியொரு கருத்து நிலவுவதாலேதான், அண்மையில் சுங்கை கண்டிஸ்- பலோக்கோங்-ஸ்ரீ செத்தியா -ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பாரிசான் கூட்டணிக்கட்சிகளிடையே நல்லுறவற்ற நிலை நீடித்ததாலே; அத்தொகுதிகளில் பெரும்பான்மையான வாக்குகளில் தோற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இதேபோன்ற நிலை போர்ட்டிக்சன் தொகுதியிலும் நிலவாது என்று அறுதியிட்டு கூற முடியாது. அதனால் இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் ம இ கா வசம்; அத்தொகுதி போட்டிக்குத் தயாராகுமானால், ம இ கா வின் புதிய தலைமைத்துவம், அதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? அதனால் இனவாரியான தேர்தலையே பாரிசான் உறுப்புக்கட்சிகளும் அத்தொகுதியிலும் எதிர்கொள்ள வேண்டி வந்தால் ம இ காவுக்கு அது மரணயடியாக அமையலமென்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

களத்திலிருந்து
உங்கள்- சாணக்கியன்-
13/9/18-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here