பி.எஸ்.எம் கட்சி மாநாடு இன்று தொடங்கியது

0
29

கோலாலம்பூர், ஜுலை, 12-பி.எஸ்.எம். எனப்படும் ம​லேசிய சோஷலிச கட்சியின்  21-வது தேசிய மாநாடு, இன்று மாலையில் காஜாங், மெட்ரோ பிரிமாவில் தொடங்கியது.  கடந்த இந்த 21 ஆண்டுகளில், 10 ஆண்டுகள் பதிவு இல்லாமலேயே பி.எஸ்.எம். கட்சி,தனது மக்கள் பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளது.

இன்று, மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவில், டாக்டர் நாசீர் கட்சியின் தேசியத் தலைவராக, இறுதி கொள்கை உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து  பி.எஸ்.எம்.  கட்சியின்ஒவ்வொரு  கிளையின் பிரதிநிதிகள் தலைவரின் கொள்கை உரையைத் தொட்டு, தங்கள் விமர்சனங்களை  செய்தனர்.

இந்த மாநாட்டில், இரண்டு முக்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. ஒன்று, இன்று உலகளவில் பேசப்படும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றான பருவநிலை மாற்றம் மற்றும் அதற்குத் தீர்வுகாண பிஎஸ்எம் பரிந்துரைக்கும் அதிரடி நடவடிக்கைகள் பற்றி முக்கியமாகவிவாதிக்கப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here