265,149பேரின் பிடிபிடிஎன் கடன் கருப்பு பட்டியல் நீக்கம் – முகைதீன் யாசின்

0
214

புத்ராஜெயா: பிடிபிடிஎன் கடன் பெற்றிருந்த 265,149 பேரின் பெயர்கள் கருப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.  மேலும் 168,289 பேரின் பெயர்கள் வரும் ஜூன் 15ற்குள் படிப்படியாக நீக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

குடிநுழைவு துறையின் கணக்கின்படி 433,709 பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், இந்த கருப்பு பட்டியல் பெயர் நீக்கத்தின் மூலம் அவர்கள் அனைவரும் இனி வெளிநாடு சென்று வர தடையில்லை என்று கூறினார்.

வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பவர்கள் இந்த பயனத்தடையின் மூலம் தங்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் என்றும், இந்த தடை நீக்கத்தின் மூலம் அவர்கள் அனைவரும் இனி பயணம் செய்வது இலகுவாகும் என்று தெரிவித்தார். – பிரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.