ஜோகூர் பாரு,டிச 6- போன்தியனில் அமைந்திருக்கும் புலாவ் குக்குப் பூங்கா, ஜோகூர் மாநில தேசிய பூங்காவாக தான் நிலைத்திருக்கும் என்று ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மாரூம் சுல்தான் இஸ்கண்டார் அறிவித்தார்.
டிசம்பர் 5, 2018 தேதியிடப்பட்ட ஜோகூர் நீர் மற்றும் நிலவள இயக்குனருக்கு துன்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் எழுதிய கடிதத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது அவரது சமூக வலைத்தள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றப்பட்டுள்ளது.
“ஜோகூர் தேசிய பூங்கா அமைந்துள்ள பகுதி ஜோகூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தாலும், ஜோகூர் மாநில அரசாங்கத்தால் அது பராமரிக்கப்படும்,” என்று அவர் கடிதத்தின் வழி தெரிவித்தார்.