பி.எ​ஸ்.எம். ​தேர்தல்: டாக்டர் ஜெயக்குமாரை எதிர்த்து சரஸ்வதி போட்டி

0
52

கோலாலம்பூர், ஜுலை,9-

பி.எஸ்.எம்.  எனப்படும் மலேசிய சோஷலிச கட்சியின் 21 ஆவது மாநாடும் தேர்தலும் வரும் ஜுன் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காஜாங் மெட்ரோ பிரிமாவில் நடைபெறவிருக்கிறது. கட்சியின் புதிய தேசியத் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணை பொருளாளர் ஆகிய  பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவியுள்ளது.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு கிளைகளிடமிருந்து 70 ​வேட்புமனுக்களை பெற்று​ள்ள சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமாரை எதிர்த்து கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் எம். சரஸ்வதி போட்டியிடுவார் எ​ன்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருவருமே பேரா மாநிலத்தை  சேர்ந்தவர்கள் என்பதுடன்  பி.எஸ்.எம்.  கட்சியின் அலைகள் மற்றும் கல்விக்குழுவில் பணியாற்றியவர்கள். தவிர இருவருமே அவசரக்கால சட்டத்தின் கீழ் கைது​ செய்யப்பட்டு சிறைக்கு​ சென்றவர்கள். இந்நி​லையில் டாக்டர்  ஜெயக்குமாருக்கு சரஸ்வதி கடும் போட்டியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.