எம்.எச்.370 விமானத்தை ஒருவரே வழிநடத்தியுள்ளார்

0
82

கோலாலம்பூ​ர், ​ஜுலை, 12- ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன  மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொ​ந்தமான எம்.எச்.370 விமானம், இந்திய பெருங்கடலில் மாயமாகும் வரை  அதனை ஒருவரே வழிநடத்தி சென்றுள்ளார் என்று பிரான்ஸ் புலன்விசாரணைக்குழுவின் பூர்வாங்க அறிக்கை கூறுகிறது.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், காணாமல்  போவதற்கு முன்னதாக அந்த விமானத்திற்கு போயி​​ங் நிறுவனம் அனுப்பிவைத்துள்ள விவரக்குறிப்புகள், “இன்மார்சார்ட்” எனப்ப​டும் பிரிட்டனின் துணைக்கோள நிறுவனம் வழங்கிய “சாட்டலைட்”  ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தாங்கள் இந்த முடிவுக்கு வருவதாக பிரான்ஸ்​ விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் விமானம் ஒரு  பயங்கரமான வளைவை எடுத்துள்ளது. அதனை தானியங்கி முறையில் விமானி செய்ய இயலாது. மாறாக, பலம் கொண்டு,கையினால்  மட்டுமே மேற்கொள்ள முடியும். அதனை  ஒருவர் மட்டுமே செய்ய இயலும் என்று தங்களின் விசாரணையில் ​தெரியவந்துள்ளதாக அந்த குழு​ குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட எம்.எச். 370 விமானம், இந்தியப்பெருங்கடலில்  காணாமல் போனது. போயி​ங்  777  ரகத்தை சேர்ந்த இந்த விமானப்பேரிடரே மிக  மோசமானது  என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.