நீரைப் பயன்படுத்துவதில் சிறைச்சாலையில் இனப்பாகுபாடா?:20 கைதிகள் இரவு உணவை புறக்கணித்தனர்

0
29

கோலாலம்பூர், ஜூலை 14- பல்லினக் கைதிகளைக் கொண்ட சுங்கை பூலோ சிறைச்சாலையில்   தண்ணீரைப் பயன்படுவத்தில் இனப் பாகுபாடு காட்ட தேவை இல்லை என்று சில இந்திய கைதிகள் உணவு உண்ணாமல் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். சில சிறைச்சாலை அதிகாரிகள் இந்திய கைதிகளிடம் இன வெறுப்பைக் காட்டுவதாக மலேசிய கினிக்கு ஒரு கைதியின் குடும்ப உறுப்பினர் விளக்கமளித்துள்ளனர். மேலும், தகாத வார்த்தையில் தன் கணவனை அந்த அதிகாரிகள் திட்டி உள்ளனர் என்று கூறினார். மற்றொரு குடும்ப உறுப்பினர், சிறை அதிகாரிகள் இந்தியர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என புகார் செய்துள்ளார். அதிகாரிகளின் இன வெறுப்பை எதிர்த்து கடந்த புதன் கிழமையிலிருந்து கைதிகள் உண்ணாவிரதத்தில் இறங்கி உள்ளனர்.

சுங்கை பூலோ சிறைச்சாலை இயக்குனரிடம் பேசுகையில், தண்ணீர் கொடுக்காததால் சிறுபாண்மையான 20 இந்தியக் கைதிகள் உண்ணாவிரதத்தில் இருப்பது உண்மையே. ஆனால் அவர்கள் போராட்டம் ஏதும் நடத்தவில்லை என்றார்.  முஸ்லீம்கள் தொழுகையின் போது நாங்கள் அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தோம். உடன்படாத சில இந்திய கைதிகள் இரவு உணவை புறக்கணித்தனர். இருந்தபோதும் சிறையில் நிலமை சீராக உள்ளது என்று அவர் கூறினார். சிறையில் கைதிகள் எந்தப் போராட்டதிலும் ஈடுபடுவதற்கு முன்பு சிறையில் பாரம் பூர்த்திச் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here