கோவில் சம்பவங்கள் குறித்து இதுவரை 102 நபர்கள் கைது!

0
49

ஷா அலாம், டிச 6- சுபாங் ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கலவரம் தொடர்பில் இந்த வாரம் 3 பேரை கைது செய்ததில் இன்று காலை 8 மணி வரை கைதானவர்களின் எண்ணிக்கை  102 ஆக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 102 பேரில்  49 மலாய், 44 இந்திய, ஒரு சீன மற்றும் எட்டு இந்திய முஸ்லீம் ஆண்கள் அடங்குவர், “என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here