பி.என் பிரதிநிதியான சிவாராஜூக்காக வெளிநடப்பு-சஹிட் ஹமிடி!

0
55

கோலாலம்பூர், டிச 6- கெமரன் மலை தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் நேற்று மக்களவை சபாநாயகரால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து இன்று மக்களவை வளாகத்தில் எதிர்க்கட்சியினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.

மலேசிய அரசியல் சாசனத்துக்குப் புறம்பானது என தேசிய முன்னணி தலைவரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அமகமட் சாஹிட் ஹமிடி குறை கூறியுள்ளார்.

தேர்தல் நீதிமன்றம் கேமரன் மலை தொகுதி முடிவுகளைச் செல்லாது என அறிவித்திருந்தாலும், சிவராஜ் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதால், இன்னும் அவர் கேமரன் மலையின் அதிகாரபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்றும் அதனால் மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் செய்த முடிவு சரியல்ல என்றும் சாஹிட் வாதிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here