மஇகா வின் அடுத்தக்கட்ட தலைமைத்துவம்! மஇகாவின் சொத்துகளை விற்றுவிடுமா?  மேம்படுத்துமா?

0
139

சிறப்புப்பார்வை!

மஇகா வின் அடுத்தக்கட்ட தலைமைத்துவம்!

மஇகாவின் சொத்துகளை விற்றுவிடுமா?  மேம்படுத்துமா?

மஇகா வின் அடுத்தக் கட்டத் தலைமைத்துவம் தற்போதுள்ள மஇகா தலைமையக் கட்டிடத்தை விற்றுவிடுமா?அல்லது மஇகா கட்டிடத்திற்கு பக்கத்தில் உள்ள நிலவுரிமையாளரிடம் கூட்டமைத்து கட்டிடத் தொழிலில் ஈடுப்படுமா?

சுயமாகச் சம்பாதிக்கவும் நினைக்குமா? இத்தகைய திரிசங்கு கேள்விக்கான பதில் இல்லாத போது; இந்த கட்டிடத் தைத் தவிர்த்து மஇகா விற்கு பல மாநிலங்களில் கட்டிடங்களும் சில நிலங்களுமிருக்கின்றன். இந்த சொத்துகளும் விற்பனைச்செய்யப்படலாம்!

அதேவேளை பல மில்லியனுக்கு மதிப்புள்ள டாமான்சாரா நிலத்தையும் விற்பனைச் செய்யலாம், அல்லது அந்த நிலத்தில் பல மாடிக் கட்டிடம் எழுப்பப்பட்டு வியாபார மையமாக்கப்படலாம்,  இதற்கெல்லாம் சொல்லப்படும் ஒரே காரணம்; கட்சியை வழி நடத்த பணம் தேவைப்படும் என்பதுதான்.அதற்கு ஈடுக்கட்ட இந்த மாதரி திட்டங்கள் அவசிமென்று காரணங்களை முன் வைக்ககலாம்!.என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒர் அரசியல் கட்சியான மஇகா; ஏற்கனவே தொழில் அடிப்படையில் மைக்காவை அமைத்து படுமோசமாக வீழ்ந்து போனதாலே; சமூகம் இன்னும் தாறுமாறா கத் திட்டிக்கொண்டிருக்கிறது. அதனுடைய எதிரொலியை அண்மைய தேர்தல் வரை பார்க்கவும் முடிந்தது அதேபோன்ற நிலை மீண்டும் மஇகா வுக்கு வந்துவிடக்கூடாது என்று சில தலைவர்கள் எண்ணுகிறார்கள்.

அதோடுமட்டுமல்லமக்களோடு மக்களாக நின்று மக்களுக்குத் தேவையான பணியைச் செய்ய வேண்டிய  மஇகாவானது ஒரு செண்டிரியான் பெர்ஹாட நிறுவனமாக மாறுவது சரியாகுமா? என்ற குமறலோடுதான் அடுத்தக்கட்டத்தலைமைத்துவத்தை எதிர் நோக்க வேண்டுமா? என்ற கேள்வியை முன் வைக்கவே செய்கிறார்கள்!

எனவே ஏற்கவே மஇகா மெம்பர்களைத் தவிர்த்து விட்டு, நம்பர்களால் ஆளப்படுமா என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லப்படமலிருந்து வருகிறப்படியால் அடுத்தக்கட்ட தலைமைத்துவம் பச்சை ரத்தம் வேறு பாய்ச்சப்படுமென்று சூசகமாகச் சொல்லியிருப்பதாலே இரத்தம் சிகப்புத்தானே இதிலென்ன பச்சை என்று மஇகா வினர் பெருமளவு குழம்பிதான் இருக்கிறார்கள்!

களத்திலிருந்து

உங்கள்- சாணக்கியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here