மகாதீருடன் அன்வார் மீண்டும் மோதுவாரா? (பகுதி–4) – 20-2-2019

0
94

பெரு. அ. தமிழ்மணி அலசுகிறார்!

* சபா, சரவாவில் பெர்சத்து காலூன்றிடவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்கவும் மகாதீரின் விரிவானத் திட்டமென்ன?

* அம்னோவைப் படிபடியாக சிதைக்கவும் அதிலிருந்து ஆட்களை மீட்கவும் சதித்திட்டமா?

* அன்வார் எட்டடிப் பாய்வதற்குள் மகாதீர் பதினாறடி பாய்வாரா?

இப்படி அடுக்கடுக்கான அலசலோடு இன்றைய அரசியல் களம் நகர்கிறது.

நம்பகத்தன்மையென்பது; அரசியலில் யாருக்கும் யாருடனும் இருக்கப்போவதில்லை, அதுவும் ஆட்சி அதிகாரம், பணம், பதவி, செல்வாக்கு இவற்றைச் சுற்றிவரும் எல்லா  மனிதர்களிடம் பெரும்பாலும் அது, நிலைப்பதில்லை; என்று திசைகள் நிர்வாக ஆசிரியர் பெரு. அ. தமிழ்மணி இன்றைய தமது நான்காவது பகுதியில் ஒரு  முன்னோட்டமாகக் குறிப்பிடுகிறார்.

இந்த நிலைபாடு, அன்வாருக்கும், மகாதீருக்குமானது மட்டுமல்ல; பொதுவாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்துமென்று தமிழ்மணி குறிப்பிடுகிறார்.

அதையொட்டிதான் நாட்டின் ஆட்சி, அதிகாரத்தை ஒவ்வொரு மனிதனும் நகர்த்த முடியும், அதில் விசித்திரங்கள் நிறைந்த மனிதராக மகாதீரும், இன்றைய அரசியலில் வித்தைகளில் சிக்கியுள்ள அன்வாரும் எப்படி கரை சேரப் போகிறார்கள்; என்பதுதான் முக்கியமான விசயமாகும்!

இன்று, அவர்களுக்கிடையிலான பனிப்போரில், பிரதமர் பதவியானது  எப்படியெல்லாம் திசைமாறப் போகிறது என்பது குறித்தான விரிவான அலசலைத்தான் அரசியல் சமூக ஆய்வாளருமான தமிழ்மணி இன்று முன் வைக்கிறார்!

22 ஆண்டுகள் பிரதமராகயிருந்து எல்லாவகையான எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் சந்தித்துவிட்ட மகாதீருக்கு; மீண்டும் பிரதமர் பதவி தேவைப் பட்டிருக்கிறதென்றால்-

அதிகாரப்பலத்தோடு, ஆளுமையோடு தொடர்ந்து அவர் வாழ வேண்டுமென்று அவரே முடிச்சுப் போட்டுவிட்ட காரணங்களுக்கு சில காரியங்களையும்  நகர்த்த வேண்டுமென்ற விருப்பமுந்தான்,  மகாதீரை 93 வயதிலும் இப்படி இயக்க விட்டிருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சொன்னால், பிரதமராகயிருக்கும் போதே, அவரது உயிர் பிரிய வேண்டுமென்ற சுயவிருப்பம் கூட , அவருக்குரிய ஆளுமையாகக்கூட ஒருசமயம் இருக்கலாம் –

அதனாலேதான்  அவர் சொன்னது போன்றோ, அல்லது பிறர் முன்வைத்தது போன்றோ, அவர் அவ்வளவு எளிதாக பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைத்துவிட்டு, ஓய்வு பெற மாட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகயிருக்குமென்று, குறிப்பிடுகிற தமிழ்மணி, அது குறித்து மேலும் விவரிக்கையில்:

14 வது பொதுத் தேர்தலில் வெறும்  13 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பெர்பூமி பெர்சத்துக்கான கணக்கை திறந்த மகாதீர், எப்படி அவரால் இன்று பிரதமராக முடிந்தது?

222-நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள அவையில் உண்மையில் அவருக்கான இடம் சாமானியமானதாகும்,  நடாளுமன்ற உறுப்பினர்  தகுதி மட்டுமே அவருக்கானதாகும்.

எப்படி அவரால் பிரதமராக முடிந்தது? அன்வாரின் கெஅடிலான் கட்சிக்கான பலம் 47 ஆகும்- ஜசெகவுக்கான பலம் 42 ஆகும்; அமனானுக்குக்கான பலம் 11 ஆகும்.

இந்த கட்சிகளின் பலத்தையெல்லாம் கூட்டும் போது மொத்தம் 100 ஆகும் இந்த கட்சிகளெல்லாம், எப்போதும் மகாதீருடன் நட்பு பாராட்டினதில்லை.

14 வது தேர்தலுக்குத்தானே இந்த கட்சிகள் மகாதீருடன் கைகுலுக்கிக் கொண்டன?

அதற்கு முன்பு வரை, இக்கட்சிகளின் முன்னோடித் தலைவர்களான – அன்வாரோ, லிம் கிட் சாங் கோ- மாட் சாபுவோ மகாதீருக்கு கடும் வைரிகள்தானே? மகாதீருக்கு இவர்களும் அரசியல் விரோதிகள்தானே?

இங்குதான் மகாதீர் தன்னிடமுள்ள 13றை வைத்து; ஒரு கணக்குப் போட்டார், அந்த கணக்கின் விபரமென்ன? நாட்டுக்கான, மக்களுக்காக என்று வழக்கம் போல, குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் கலவைகளாகின அவை.

  1. நஜிப் நாட்டுப்பணத்தைக் களவாடினார்;
  2. நாடு திவாலாகி விட்டது;
  3. வரி சுமையால் மக்கள் துடிக்கிறார்கள்;
  4. கட்டுக் கடங்காத விலைவாசியால் மக்களுக்கு அவதி;
  5. எங்கும் ஊழல், எதிலும் ஊழல்;
  6. அதிகார துஷ்பிரயேகம்;
  7. தவறான அன்னிய முதலீடுகள்;
  8. கடனுக்கு மீறி மேம்பாட்டுத் திட்டங்கள்;
  9. நிதி முறைகேட்டில், நாடு நிலை குலைந்துள்ளது;
  10. வாருமானமின்றி மக்களும், வேலையின்றி அவதியும்.

இப்படி, தனது 13 எண்ணிக்கைக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை 100 டன் இவை, இணைத்த போது 113 ஆக எண்ணிக்கை மாறுகிறது; அதில் சமமான பலமென்றாலும் 111 ஆகும்!

222- க்கு  இரண்டு சீட்டுகள் அதிகமாகியது, அதன் பின்னர் சபா- சரவா மாநிலங்களிலிருந்து பிரித்தாலும் நடவடிக்கையால் உதிரியாக உதிர்ந்து போன சிலரின் ஆதரவால்;

தனது 13 றின் பலத்தை பன்மடங்காக்கி பிரதமராகியிருக்கும் மகாதீர்  அதோடுமட்டும்; இன்று நின்றுவிடவில்லை. அம்னோ தலைவர்கள் மீது வழக்குக்கு மேல் வழக்குப்போட்டு, அவர்களை மிரள வைத்து;

அதிலிருந்து 7 பேரை பிடித்து வந்து, அந்த 13 றை- இன்று, 20தாக அதிகரித்துள்ளார். அடுத்தடுத்து அம்னோ மீதான தாக்குதல் தொடர்வதோடு மட்டுமல்ல, இப்போது, சபா, சரவாக்கிலும் பெர்பூமி பெர்சத்துவை காலூன்ற வைக்கவும், அம் மாநிலங்களிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தூக்கி வந்து இப்போதுள்ள 20 தை 30 ஆக்கி, அதோடு, அஸ்மின் அலியை முன்னிறுத்தி அடிலானிலிருந்து-20- 25 வரைக்குமான எண்ணிக்கையை மீட்டெடுத்து; அதிகமாக்கி-

ஒரு சமயம் மகாதீர் பிரதமர் பதவியைத் துறப்பதாயிருக்கும் நிலைவரும் போது; 60-70 -வரைக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகரித்த பலத்தோடு தனது மகன் முக்கீரிஸை பிரதமராக்கிவிட்டுதான் மகாதீர் போவார்!

இதுதான் மகாதீரின் மாஸ்டர் பிளானாகும். இதை தனக்கான நெருக்கடியான சதித்திட்டமென்று அன்வார் இப்போது உணர்ந்துள்ளதாலே, இதை கடக்கவேண்டிய, அவருக்கான அரசியல் வியூகம் எப்படிப்பட்டதாக இனி இருக்கும், அவருக்கு தோழாமைக் காட்டுகிறவர்களாக அப்போது யார் யார் இருப்பார்கள், யாரெல்லாம் இருக்க மாட்டார்கள் என்ற புள்ளியிலிருந்துதான் அன்வாரின் பிரதமர் கனவுக்கான தேதியை குறிக்க முடியுமென்று தமிழ்மணி தமது அலசலில் கேள்வியை எழுப்பியுள்ளார்.

நாளை பகுதி 5- தில் (21-2-2019) நுழையும் போதும் இன்னும் பல  விரிவான தகவல்களோடு பயணிக்கலாமென்று தெரிகிறது.

*திசைகள் அலைப்பேசி வலைக்காட்சி, மக்களின் நம்பிக்கையான மனசாட்சி!

*உங்களை இப்போதே சப்கிரேசன் பண்ணிக்கொள்ளுங்கள்

தமிழர்களின் ஆளுமைக்கான  உரிமைக்குரல்; திசைகள் மட்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.