யார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்து போட்டியிடலாம் – சாயிட்

0
152

பாகன் டத்தோ  : துணை பிரதமர் டத்தோ சிறீ டாக்டர். அகமது சாயிட் ஹமிதி,  யார் வேண்டுமானாலும் தன்னை எதிர்த்து தன் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் ஆனால், மக்கள் தன்னை மட்டுமே வெற்றிப் பெற  செய்வர் என்றும் தெரிவித்தார்.

எந்த தனி நபரோ, எந்த கட்சியோ யார் வேண்டுமானாலும் என்னை எதிர்க்கலாம், ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உள்ளது.  அதே போல் , ஜனநாயக நாட்டில் மக்கள் தனக்கு விருப்பமானவர்களையே தேர்ந்தெடுப்பர் என்றும் தெரிவித்தார்.

தனக்கு மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் அதனால் தான் பயமின்றி மக்கள் தன்னை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறுவதாக தெரிவித்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், வேலை மற்றும் கல்வியின் காரணமாக தொகுதியை விட்டு சென்றிருப்பவர்கள், தேர்தல் தினம் அன்று திரும்பி தொகுதிக்கு வந்து வாக்களிக்க வேண்டும் என்றும்  வேண்டுகோள் விடுத்தார். – பிரியா

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here